கார் ஒன்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு.

 கார் ஒன்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு.


சூப்பர் விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (27) மாலை 3.00 மணியளவில் சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் - புத்தளம் வீதியில் அமைந்துள்ள சூப்பர் விற்பனை நிலையத்திற்கு அருகில் வாகன தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வாகனத்தின் சாரதி இருக்கையில் இருந்து உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

66 வயதுடைய கண்டி, அம்பிடிய, தம்வெலபார வீதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.