G.C.E (O/L) மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முன்னெச்சரிக்கை.

 G.C.E (O/L) மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முன்னெச்சரிக்கை.


கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

இதன்படி, இன்றைய தினம் முற்பகல் வேளையில் மாத்திரம் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சை மத்திய நிலையங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவது மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் பரீட்சை கட்டளைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.