அற்புதம் நிறைந்த இவ்வுலகில் அற்புதமான ஒரு குழந்தை Sara Haany வெறுமனே 2 வயதில் அதீத திறமையா?


 அற்புதம் நிறைந்த இவ்வுலகில் அற்புதமான ஒரு குழந்தை Sara Haany

வெறுமனே 2 வயதில் அதீத திறமையா?


தமது பிள்ளைகளை பற்றி 

பெற்றோர் சிறு வயது முதலே 

கனவு காண்பார்கள். 


குழந்தை கருவறையில் இருக்கையில்  அதன் எதிர்காலம் பற்றி திட்டம் போடும்பெற்றோரும் இல்லாமலில்லை.


இதில் தாயின் பங்கு மிக பிரதானமாக இருக்கும். 

சில சமயங்களில் நடக்கவோ 

பேசவோ முடியாத குட்டிப் பிள்ளை

கள்,வயதுக்கு மீறிய திறமைகளை

வெளிப்படுத்திய பிரமிப்பூட்டும் 

தவல்களும் வீடியோக்களும் அவ்வப்

போது வெளியாகும்.


 ஆச்சரியமூட்டும் புத்திசாலித்தனத்தையும் வயதுக்கு 

மீறிய திறமைகளையும் வெளிப்படுத்தும் சுட்டிப்பிள்ளைகள் பற்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அறியக் கிடைத்தாலும் அண்மையில் 

நம் நாட்டிலும் அதீத புத்திசாலியான 

குட்டிக் குழந்தையொன்றை பற்றி 

சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. 


மாவனல்லை  Paddy Fild Garden 

பிரதேசத்தை சேர்ந்த ஒன்றரை

வயதான சாரா ஹானி

நௌபல் தான் அந்த புத்திசாலி குழந்தை.


இக்குழந்தையை  பற்றி அக்குழந்தையின் தாய் சிப்னா ஹாரிஸ் கூறுகையில்.


இந்தியாவின் தமிழ் 

நாட்டை சேர்ந்த 21 மாதக் குழந்தையொன்று இவ்வாறு திறமை காட்டுவதாக யூடியுபில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தக்

குழந்தை 140 பட அட்டைகளை துல்லியமாக அடையாளங் காட்டுவதோடு வேறு நாடுகளை

சேர்ந்த குழந்தைகளும் 

இவ்வாறு பிரமிப்பூட்டும் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளன. 


'இந்த சாதனைகளை முறியடித்து சாரா 150 ற்கும் மேற்பட்டவற்றை சரியாக காட்டுகிறார். இதனை நாம் யூடியுபில் பதிவேற்றிய 

நிலையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதனை சில நாட்களிலே பார்வையிட்டுள்ளனர்' என சாராவின் தாய் பெருமையாக கூறுகிறார். 


தற்பொழுது நாட்டுத் தலைவர்களையும் அ டையாளாங் காட்ட ஆரம்பித்திருக்கிறார் சாரா.


ஜனாதிபதி கோட்டாபய,பிரதமர் மஹிந்த, முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மற்றும் பாரதியார், அன்னை தெரேசா என முக்கியமானவர்களின் பெயர்களை

சொன்னால் அதனை துல்லிய

மாக காட்டி விடுகிறாராம்.


'இந்த நிலையில் மேலும் சில தலைவர்களையும், உலக வரைபடத்திலுள்ள நாடுகளையும்,மேலும் சில நாடுகளையும்,இலங்கையிலுள்ள மாகாணங்கள், மாவட்டங்கள் என்பவற்றையும் காண்பித்து வருகிறேன்' என்கிறார் 

சாராவின் தாய். 


குழந்தையின் எதிர்காலம் பற்றிய 

கனவு என்ன என்பதைப்பற்றியும் 

அவர் கூறத்தவறவில்லை. 


'மற்றைய பெற்றோரைப் போன்று 

சாரா டொக்டராகவோ பொறியியலாளராகவோ வரவேண்டும் என்று 

ஆசைப்படவில்லை.


வித்தியாசமான துறையில் அவர் மிளிர வேண்டும். நாஸாவுக்கு செல்ல வேண்டும் போன்ற கனவு தான் எனக்கு இருக்கிறது. ஆனால் அதனை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.எமது கனவு

களை அவர் மீது திணிக்க மாட்டோம்' 

என்றார். 


பரந்த உலகில் தனது மகள் சிறகு 

விரித்து பறக்க வழிகாட்ட துடிக்கும் 

அந்தத் தாய் கூறினாள். 


இதே வயதுடைய ஏனைய குழந்தைகளிடம் இல்லாத கவனமும் நிதானமும் தாயின் உணர்வறிந்து நடக்கும் பக்குவமும் இந்த ஒருவருடமும் 8 மாதமும் நிறைந்த சாரா ஹானியிடம் நிறையவே இருக்கிறது. 


*எதிர்காலத்தில் பெண் அப்துல் கலாமொருவர் உருவாக வாழ்த்துவோம்.*


இக்குழந்தையின் மேலதிகமான அறிவுத்திறன்களை பார்வையிட விரும்பினால் கீழே உள்ள YouTube channel ல் பார்வையிடலாம்.


மேலும்


நீங்கள் இக்குழந்தை உலகளாவிய ரீதியில் போட்டியிட உங்கள் ஆதரவை இக்குழந்தை யின் *YouTube channelஐ Subscribe* செய்வதூடாக தெரிவியுங்கள்


*YOUTUBE*

👇👇👇

https://youtube.com/channel/UC5bBOchnCJ5hkRA9XguiYzg


*FACEBOOK*

👇👇👇

https://www.facebook.com/sarahaanynawfal/


*INSTAGRAM*

👇👇👇

https://www.instagram.com/sara.haany1?r=nametag


*TWITTER*

👇👇👇

https://twitter.com/Haany1Sara?s=09

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.