லெபனான் நாட்டில் இருந்து 177 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 லெபனான் நாட்டில் இருந்து 177 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


லெபனான் நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்று பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிய 177 இலங்கையர்கள், இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று அதிகாலை 3:45 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் இலங்கைக்கு வரமுடியாமல் தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் லெபனான் நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அரசாங்க தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.