அடுத்தவன் மனைவியை தொந்தரவு செய்த நபருக்கு நேர்ந்த கதி.. கொலை செய்து விட்டு கணவன் - மனைவி போலீசில் சரண்.

 அடுத்தவன் மனைவியை தொந்தரவு செய்த நபருக்கு நேர்ந்த கதி.. கொலை செய்து விட்டு கணவன் - மனைவி போலீசில் சரண்.


கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலைசெய்துவிட்டதாக கூறி கணவன், மனைவி இருவர் நேற்றுமுன்தினம் (30) சீகிரிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இலங்கை விமானப்படை வீரரரும் அவருடைய மனைவியும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, விமானப்படை வீரரின் மனைவிக்கும் கொலைசெய்யப்பட்ட நபருக்கும் இடையில் நீண்டகாலமாக காதல் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. 

இதனால் விமானபடை வீரர் மெல்சீரிபுர பிரதேசத்திலிருந்து சீகிரிய பிரதேசத்திற்கு வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக்கொண்டு பிள்ளைகளுடன் தங்கியுள்ளார். 

எனினும் கொலைசெய்யப்பட்ட நபர் தொடர்ந்து அவர்களை தொந்தரவு செய்து வந்துள்ளார். இத்தகையதொரு பின்னணியில் தான் இக்கொலை சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

கொலைசெய்யப்பட்ட நபர் தங்கியிருந்ததாக கூறப்படும் இடத்தில் பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

அதற்கமைய அங்கிருந்து 200 மீற்றர் தொலைவிலிருந்த சீகிரிய பிரதான வீதிக்கு அருகாமையிலிருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.