2ம் தவணை நாளை ஆரம்பம் − மாணவர்கள் பாடசாலைக்கு எவ்வாறு செல்ல வேண்டும்?

2ம் தவணை நாளை ஆரம்பம் − மாணவர்கள் பாடசாலைக்கு எவ்வாறு செல்ல வேண்டும்?

𝑰𝑻𝑴▪️நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

𝑰𝑻𝑴▪️சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றுநிரூபத்திற்கு அமையவே, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

𝑰𝑻𝑴▪️பாடசாலைகள் நடத்தப்படும் விதம் குறித்து புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் வரை, முதலாம் தவணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே பின்பற்றுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதன்படி, வகுப்பொன்றில் 15திற்கு குறைவான மாணவர்கள் இருப்பார்களாயின், அந்த வகுப்பின் கல்வி நடவடிக்கைகளை நாளாந்தம் நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️அத்துடன், 16 முதல் 30 வரையான மாணவர்கள் வகுப்பொன்றில் இருப்பார்களாயின், மாணவர்களை இரு குழுக்களாகவும், 30திற்கும் அதிகமான மாணவர்கள் இருப்பார்களாயின் 3 குழுக்களாகவும் பிரித்து கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.