நாட்டில் நீண்ட நாட்களின் பின்னர் முடக்கப்பட்ட ஒரு பகுதி.

நாட்டில் நீண்ட நாட்களின் பின்னர் முடக்கப்பட்ட ஒரு பகுதி.

𝑰𝑻𝑴▪️குருநாகல் மாவட்டத்தின் கும்புக்கேடே, தித்தவெல்கால ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கும்புக்கேடே பொது சுகாதார வைத்திய அதிகாரி சிசிர பண்டார தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️கடந்த 16ம் திகதி முதல் இந்த பகுதி முடக்கப்பட்டதாகவும், முடக்க நிலைமையை தளர்த்துவதற்கான தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️குறித்த பகுதியில் நடத்தப்பட்ட 97 பி.சி.ஆர் பரிசோதனைகளில், 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர், தித்தவெல்கால பகுதியைச்; சேர்ந்தவர்கள் என அவர் கூறுகின்றார்.

𝑰𝑻𝑴▪️அதனாலேயே, குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

𝑰𝑻𝑴▪️இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வெளியாவதை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.