கொரோனாவின் 3வது அலை தொடர்பில் சுகாதார பிரிவு விடுக்கும் தகவல்.

 கொரோனாவின் 3வது அலை தொடர்பில் சுகாதார பிரிவு விடுக்கும் தகவல்.


சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் மக்கள் உரிய வகையில் செயற்பட தவறும் பட்சத்தில், கொவிட் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் மக்களை நூறு வீதம் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதுவருட காலப் பகுதியில் மக்கள் செயற்படும் விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் நிகழ்வுகளை சிறியளவில் ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் குழுக்களாக இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

சுகாதார நடைமுறைகளின் கீழ், நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் குறித்து, எதிர்வரும் தினங்களில் சுகாதார அதிகாரிகள் தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என காதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.