மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கொலை.

மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கொலை.

மியன்மார் இராணுவத்திற்கு எதிராக அந்த நாட்டில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதல்களில் இதுவரை 700 பேர் கொல்லப்பட்டனர்.

அதன்படி ,பர்மாவின் அரசியல் கைதிகளுக்கான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி மியன்மாரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களை அந்த நாட்டு இராணுவம் கைது செய்ததுடன், பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து அங்கு ஒரு வருட காலத்திற்கு இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், விளக்கமறியலில் உள்ள அரசியல் தலைவர்களை உடன்விடுவிக்க வேண்டும் எனவும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிராகவும் மியன்மார் பொதுமக்களால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் ,அதனை கட்டுப்படுத்த மியன்மார் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது வன்முறைகளை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.