உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இரு வாரத்திற்குள்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இரு வாரத்திற்குள்.

2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ,2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதற்கமைய உயர்தர பரீட்சைகள் 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதி நிறைவடைந்தது.

3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அந்நிலையிலேயே உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அதாவது எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் அம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் அதேவேளை , ஜூன் மாதம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் அம்மாணவர்கள் ஜூலை மாதம் முதல் உயர்தர கல்வியை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் ,இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சை , புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஒக்டோபர் மாதம் வரையும் , சாதாரண தர பரீட்சைகள் 2021 ஜனவரி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.