ஹோட்டல்கள் தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்புத் திட்டம்.

 ஹோட்டல்கள் தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்புத் திட்டம்.


ஏப்ரல் 1 முதல் 5ஆம் திகதி வரை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட முக்கிய ஸ்தலங்களுக்கு விஷேட பாதுகாப்பு திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. 

உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இவ்விஷேட பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். 

இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு தினம் ஏப்ரல் 4ஆம் திகதியாகும். இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவும் நினைவு கூரப்படவுள்ளது.

இராணுவத் தலைமையகம் பாதுகாப்பு படைத்தளபதிகளுக்கு குறிப்பிட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தேவையான பாதுகாப்புத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என பிரிகேடியர் பிரேமரத்ன தெரிவித்தார்.  

பிரதான பாதுகாப்பு திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தும் அதேநேரம் இராணுவம் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்துவர் எனவும் அவர் கூறினார். 

2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஹோட்டல்கள், தேவாலயங்களை இலக்குவைத்து மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்களின் போது 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இதன்பின் விஷேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.