பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு (விலை விபரங்கள் இணைப்பு)

 பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு (விலை விபரங்கள் இணைப்பு)


எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், சதொச விற்பனை நிலையங்களின் ஊடாகவே விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 150 முதல் 165 ரூபாவாக விற்பனை செய்யப்படும் சிவப்பு சீனியின் விலையை 115 ரூபா வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வணிக கூட்டுதாபனத்தினால் தயாரிக்கப்படும் 100 கிராம் தேயிலை, தற்போது சந்தையில் 135 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், அந்த தேயிலையை எதிர்வரும் வாரம் முதல் 95 ரூபாவிற்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் சோயா எண்ணெயை, 310 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கை கழுவும் திரவம் 100 மில்லி லீற்றரை, 250 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, 50 மில்லிலீற்றர் கை கழுவும் திரவத்தை, 150 ரூபா வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எல்.எஸ் சான்றிதழை பெற்ற முகக்கவசத்தை 14 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அபியாச கொப்பிகளின் விலைகளை, தற்போது காணப்படுகின்ற விலைகளில், 20 வீதத்தால் குறைக்கவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.