சிவப்பு சீனியின் விலை அதிரடியாக குறைப்பு.

 சிவப்பு சீனியின் விலை அதிரடியாக குறைப்பு.


சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக எதிர்வரும் வாரம் முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி ஒரு கிலோகிராமை 115 ரூபாவிற்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிவப்பு சீனி, உடலுக்கு பாதிப்பு குறைவான சீனி வகை என அவர் கூறுகின்றார்.

நாட்டில் சிவப்பு சீனியின் விலை தற்போது 150 ரூபா முதல் 165 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக சிவப்பு சீனி ஒரு கிலோகிராமை 115 ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

வெள்ளை நிற சீனி தற்போது 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.