பிரேத பரிசோதனையின் பின்னர், மீசை வளர்ந்திருந்த சடலம் – நடந்தது என்ன?

பிரேத பரிசோதனையின் பின்னர், மீசை வளர்ந்திருந்த சடலம் – நடந்தது என்ன?

𝑰𝑻𝑴▪️மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நபரின் முகத்தின் மீசை வளர்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴▪️பூதவுடலின் முகத்தின் மீசை வளர்ந்ததை அவதானித்த உறவினர்கள், சடலத்தை மீண்டும் மொனராகலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️எத்திலிவெவ – வெஹெரயாய பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஜே.ஏ.எல்.ஞானதிலக்க என்ற இரு பிள்ளைகளின் தந்தை கடந்த 9ம் திகதி கிணறொன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இவ்வாறு கிணற்றில் வீழ்ந்த உயிரிழந்த நபரின் சடலத்தை வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️அதனைத் தொடர்ந்து, மறுதினம் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️கடந்த 12ம் திகதி சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்து, அன்று பிற்பகல் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️அதன்பின்னர், பூதவுடல் மலர்சாலையொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டு, எம்பம் செய்யப்பட்டு, வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️13ம் திகதி உயிரிழந்த நபரின் மகள், சடலத்தின் முகத்தின் மீசை வளர்ந்துள்ளதை அவதானித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️தனது தந்தை எந்தவொரு சந்தர்ப்பத்தில் மீசை வளர்ப்பது இல்லை எனவும், இது தனது தந்தை இல்லை எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, சடலம் மீண்டும் மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️யானை தாக்குதலுக்கு இலக்காகி, கடந்த 11ம் திகதி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வைத்தியசாலை தரப்பினர் மாற்றி வழங்கியுள்ளமையே, இந்த பிரச்சினைக்கான காரணம் என பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️அதன்பின்னர், உரிய சடலத்தை வைத்தியசாலை தரப்பிடமிருந்து பெற்று, சடலத்தை அன்றைய தினமே அடக்கம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஆர்.எம்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.