பெண்களை இழிவாகப் பேசிய ஜீவன்! போராட்டத்தில் குதித்த பெண்கள்.

பெண்களை இழிவாகப் பேசிய ஜீவன்! போராட்டத்தில் குதித்த பெண்கள்.

𝑰𝑻𝑴▪️பெண்களை இழிவாக பேசியதாக தெரிவித்தும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் எனக் கோரியும் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

𝑰𝑻𝑴▪️ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

𝑰𝑻𝑴▪️அண்மையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கி பேசிய சமயம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை பரிமாறியதாக அவர் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

𝑰𝑻𝑴▪️“சின்னப்பயலேவ சின்னப்பயலே சேதி கேளடா நீ சொல்லிப் போன வார்ததையைக் கொஞ்சம் எண்ணிப்பார்டா” - “வாங்காதே வாங்காதே மலையகப் பெண்களின் மானத்தை வாங்கதே” - “அரசியல் நாகரிகம் படி” - “அம்மாக்களின் காலில் விழு” போன்ற வாசகங்கள் பொறிப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இந்நிலையில் பல்வேறு மலையக அமைப்புகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் இவ் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனால் ஜீவன் தொண்டமான் மலையக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.