இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் உருவானது! ஏனைய நாடுகளுக்கும் ஆபத்தா?
இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் உருவானது! ஏனைய நாடுகளுக்கும் ஆபத்தா?
இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாகவும் குறித்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது,
“இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் B.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, B1617 வம்சத்தை சேர்ந்தது.
இந்த வைரஸ், E484Q, L452R என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது.
இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
அத்துடன், பிற நாடுகளிலும் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக, ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா, வேகமாக பரவக்கூடியது.
இதனால், தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” என அவர் கூறினாா்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.