குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் ( அஸ்கார் - சுஹைல் )நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் ( அஸ்கார் - சுஹைல் )நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

𝑰𝑻𝑴▪️திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴▪️இவ்வனர்த்தம் இன்று (18) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴▪️இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் (14வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த

அலிப்தீன் அஸ்கார் (14வயது) எனவும் தெரியவருகின்றது.

𝑰𝑻𝑴▪️நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴▪️உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.