சிட்டி பஸ்" சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை.

"சிட்டி பஸ்" சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை.

கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட "பார்க் அன்ட் ரைட் சிட்டி பஸ்" சேவையை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் சில வாரங்களில் பிலியந்தலை 120 பஸ் பாதையினூடாகவும் (bus route) காலி வீதி மொரட்டுவ - கொழும்பு பஸ் பாதையினூடாகவும் நாட்டின் இன்னும் சில பிரதான நகரங்களினூடாகவும் இந்த பஸ் சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது கொழும்பை அடுத்துள்ள 4 பஸ் பாதைகளினூடாக (டிரள சழரவந) பயணிக்கின்ற சிட்டி பஸ் வாகனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் கிடைப்பதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

சிட்டி பஸ் சேவை கடந்த ஜனவரி 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் சேவை கொட்டாவ மாகும்புற பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து 138, 174, 112 மற்றும் 115 ஆகிய பஸ் பாதைகளினூடாகப் (bus route) இடம்பெறுகிறது.

இந்த பஸ் சேவைக்கு பொதுவான பஸ் கட்டணத்தின் ஒன்றரை மடங்கு கட்டணம் அறவிடப்படுகின்றது. இந்த சேவையின் மூலம் கடந்த மூன்றரை மாதங்களினுள் குறிப்பிடத்தக்களவு வருமானம் பெறப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.