இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றுமொரு தேங்காய் எண்ணெய் லொரி கண்டுபிடிக்கப்பட்டது.

இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றுமொரு தேங்காய் எண்ணெய் லொரி கண்டுபிடிக்கப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மையத்திய நிலையத்தின் பின்னால் உள்ள ஒரு தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் லொரி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தம்புள்ளை மேயருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தம்புள்ளை பொலிஸார் நேற்று இரவு (01) குறித்த லொரியை கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த தேங்காய் எண்ணெயை மனித நுகர்வுக்கு ஏற்றதா என்பதை அறிய சுகாதாரத் துறையால் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும் இந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி, வியாபாரம் செய்தல், கொண்டு செல்லல் அல்லது சேமித்தல் தொடர்பான எந்த சட்டப்பூர்வ அனுமதியோ வேறு எந்த ஆவணமோ இல்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.