வரலாற்றில் இன்று. மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று.

மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்


👉1568 – ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.

👉1808 – மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

👉1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.

👉1876 – பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.

👉1885 – புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.

👉1889 – எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.

👉1928 – அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.

👉1933 – ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.

👉1945 – இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.

👉1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.

👉1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.

👉1964 – 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.

👉1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

👉2002 – கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

👉2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.

👉2006 – குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

👉2009 – வல்லிபுரக்குறிச்சி மருதடி தான்றோன்றியீஸ்வரர் தேர்.


இன்றைய தின பிறப்புக்கள்


👉1921 – சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)

👉1969 – பிறயன் லாறா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாளர்

👉1975 – டேவிட் பெக்காம், இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்

👉1983 – பொத்துவில் அஸ்மின், ஈழத்துக் கவிஞர்


இன்றைய தின இறப்புகள்


👉1519 – லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (பி. 1452)

👉2009 – கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்


இன்றைய தின சிறப்புகள்.


👉போலந்து – கொடி நாள்

👉ஈரான் – ஆசிரியர் நாள்

👉இந்தோனீசியா – தேசிய கல்வி நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.