வரலாற்றில் இன்று. மே 3 கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று.

மே 3 கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.இன்றைய தின நிகழ்வுகள்


👉1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.

👉1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

👉1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது.

👉1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது.

👉1802 – வாசிங்டன், டி. சி. நகரமாக்கப்பட்டது.

👉1808 – சுவீடன் சுவீபோர்க் கோட்டையை உருசியாவிடம் இழந்தது.

👉1808 – முதல் நாள் கிளர்ச்சியில் ஈடுபட்ட மத்ரித் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉1814 – எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.

👉1815 – டொலெண்டீனோ போரில் நேப்பில்ஸ் மன்னன் யோக்கிம் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான்.

👉1837 – ஏதென்சு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

👉1855 – அமெரிக்கர் வில்லியம் வாக்கர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 60 பேருடன் நிக்கராகுவாவைக் கைப்பற்றப் புறப்பட்டார்.

👉1860 – பதினைந்தாம் சார்லசு சுவீடன் மன்னராக முடிசூடினார்.

👉1879 – யாழ்ப்பாணம், கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.[1]

👉1901 – புளோரிடாவின் ஜாக்சன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.

👉1913 – இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.

👉1920 – சியார்சியாவில் போல்செவிக் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

👉1921 – வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என அயர்லாந்து இரண்டாகப் பிரிந்தது.

👉1928 – சீனா, சினானில் 12 சப்பானியப் பொது மக்கள் சீனப் படைகளினால் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக அடுத்தடுத்த நாட்களில் 2,000 வரையான சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[2]

👉1939 – சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை ஆரம்பித்தார்.

👉1941 – பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர்.

👉1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான் படை கேப் அர்கோனா, தீல்பெக், இடாய்ச்சுலாந்து ஆகிய சிறைக்கப்பல்களை தாக்கி மூழ்கடித்தது.

👉1962 – டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

👉1973 – சிக்காகோவின் 1,51 அடி உயர 108-மாடி சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கட்டடமாக அறிவிக்கப்பட்டது.

👉1978 – முதலாவது எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அமெர்க்காவில் அனுப்பப்பட்டது.

👉1986 – கொழும்பு விமான நிலையத்தில் எயர்லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.

👉1999 – ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா நகரை பெரும் சூறாவளி தாக்கியதில் 45 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.

👉2001 – 1947 ஆண்டில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்கா ஆணையத்தில் உறுப்புரிமையை இழந்தது.

👉2002 – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜலந்தரில் இந்திய வான்படையின் மிக்-21 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து, 17 பேர் காயமடைந்தனர்.

👉2006 – ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

👉2016 – கனடா, ஆல்பர்ட்டாவில் மெக்மரி கோட்டையில் தீ பரவியதில் 88,000 பேர் இடம்பெயர்ந்தனர். 2,400 வீடுகள் அழிந்தன.


இன்றைய தின பிறப்புகள்.


👉1469 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1527)

👉1896 – வே. கி. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (இ. 1974)

👉1898 – கோல்டா மேயர், இசுரேலின் 4வது பிரதமர் (இ. 1978)

👉1899 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர், விடுதலைப் போராளி (இ. 1966)

👉1903 – பிங்கு கிராசுபி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1977)

👉1919 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர் (இ. 2014)

👉1920 – அசலா சச்தேவ், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012)

👉1924 – யெகுடா அமிசாய், செருமனிய-இசுரேலியக் கவிஞர் (இ. 2000)

👉1933 – ஜேம்ஸ் ப்ரௌன், சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட அமெரிக்க இசை வல்லுநர் (இ. 2006)

👉1935 – சி. பாலசுப்பிரமணியன், தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1998)

👉1935 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (இ. 2008)

👉1951 – அசோக் கெலட், இராசத்தானின் 21வது முதலமைச்சர்

👉1955 – ரகுபர் தாசு, சார்க்கண்ட் மாநிலத்தின் 10வது முதலமைச்சர்

👉1959 – உமா பாரதி, மத்தியப் பிரதேசத்தின் 16வது முதலமைச்சர்

👉1977 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (இ. 2017)

👉1988 – அகில், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்


இன்றைய தின இறப்புகள்.


👉1410 – எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்

👉1481 – இரண்டாம் முகமது, உதுமானியப் பேரரசர் (பி. 1432)

👉1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1627)

👉1934 – காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, தமிழகக் கருநாடக இசைப் பாடகர்

👉1957 – டபிள்யூ. ஏ. சில்வா, இலங்கையின் சிங்கள புதின எழுத்தாளர் (பி. 1890)

👉1969 – சாகீர் உசேன், இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1897)

👉1971 – ஆர். நடராஜ முதலியார், தமிழகத் திரைப்படத்துறையின் முன்னோடி, ஊமைத் திரைப்படங்களைத் தயாரித்தவர் (பி. 1885)

👉1981 – நர்கிசு, இந்திய நடிகை (பி. 1929)

👉1986 – மாத்தளை அருணேசர், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1905)

👉2005 – ஜெகத் சிங் அரோரா, இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1916)

👉2009 – பி. ராஜம், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1922)

👉2014 – கேரி பெக்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1930)


இன்றைய தின சிறப்புகள்.


👉உலக பத்திரிகை சுதந்திர நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.