வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்.

 வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்.𝑰𝑻𝑴▪️வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகள் என வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.

𝑰𝑻𝑴▪️இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனத் தொிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை மற்றும் சர்வதேசத்தில் கொவிட் பரவலின் எதிர்கால நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴  •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.