உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.

 உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.



𝑰𝑻𝑴▪️மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவுகள்.

கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபிட்டிவல நவ மஹர கிராமம் மற்றும் மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன வீதி கிராம சேவகர் பிரிவுகள்.

காலி மாவட்டத்தின் இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டானிகத கிராம ​சேவகர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சன்னஸ்கம, தொட்டகஸ்வின்ன மற்றும் கொடகம கிராம சேவகர் பிரிவுகள்.

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ நகர் கிராம சேவகர் பிரிவு.

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபொத்த மற்றும் கெந்தாவ கிராம சேவகர் பிரிவுகள்.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுஅக்கல மற்றும் பொல்ஹேள கிராம சேவகர் பிரிவுகளுக்கு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.