கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.

 கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.𝑰𝑻𝑴▪️ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

𝑰𝑻𝑴▪️எனவே தலைப்பிறை தொடர்பான ஊர்ஜிதமான தகவல்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பாக தகவல்களை 

📱0112432110, 

📱0112451245, 

📱0777316415 

என்ற தொலைப் பேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் முஸ்லிம் சேவையின் ஊடாக உத்தியோகபூர்மாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வலிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவால் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️நாட்டில் தற்பொழுது கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காணப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்றைய இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.