வரலாற்றில் இன்று – 03.06.2021 ஜூன் 3 கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 03.06.2021

ஜூன் 3  கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.



இன்றைய தின நிகழ்வுகள்


👉1539 – ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான்.

👉1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர்.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.

👉1962 – பிரான்சின் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

👉1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.

👉1969 – தெற்கு வியட்நாமில் ”மெல்பேர்ன்” என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.

👉1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

👉1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

👉1991 – ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.

👉1998 – ஜெர்மனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

👉2006 – 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

👉2006 – மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.

👉2007 – கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉2007 – தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1808 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)

👉  1924 – மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்

👉1931 – ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர்

👉1961 – லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர்

👉1966 – வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்


இன்றைய தின இறப்புகள்.


👉1657 – வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578)

👉1924 – பிரான்ஸ் காஃப்கா, செக் எழுத்தாளர் (பி. 1883)

👉1963 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (பி. 1881)

👉1963 – நாசிம் ஹிக்மட், கிரேக்க-துருக்கி எழுத்தாளர் (பி. 1902)

👉1989 – ரூஃகூல்லா மூசவி கொமெய்னி, இரானிய ஆன்மிகத் தலைவர், அரசியல்வாதி (பி. 1902)

👉1990 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927)

👉2000 – ஜெய்சங்கர், திரைப்பட நடிகர்

👉2013 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை (பி. 1988)

👉2014 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.