வரலாற்றில் இன்று – 07.06.2021 ஜூன் 7 கிரிகோரியன் ஆண்டின் 158 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 159 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 07.06.2021ஜூன் 7 கிரிகோரியன் ஆண்டின் 158 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 159 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1099 – முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

👉1494 – ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.

👉1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.

👉1692 – ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.

👉1832 – கனடாவில் கியூபெக்கில் ஐரிய குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட கொள்ளை நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

👉1863 – மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

👉1893 – மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.

👉1905 – நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது.

👉1917 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர்.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாசிப் படைகள் கொன்றனர்.

👉1967 – இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர்.

👉1981 – இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன.

👉1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

👉1991 – பிலிப்பீன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயாரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.

👉2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

👉2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

👉 2007 – கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1953 - லதா, இந்திய தமிழ் நடிகை.

👉1974 – மகேஷ் பூபதி, இந்திய டென்னிஸ் ஆட்டக்காரர்

👉1975 – ஏலன் ஐவர்சன், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்.

👉1976 - பாண்டிராஜ் ,இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர்.


இன்றைய தின இறப்புகள்.


👉1906 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கையின் சட்டசபை உறுப்பினர் (பி. 1849)

👉1964 – ஆறுமுகம் ஆச்சாரியார், யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பாசிரியர் (பி. 1890)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.