வரலாற்றில் இன்று – 06.06.2021 ஜூன் 6 கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 06.06.2021ஜூன் 6  கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.

👉1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.

👉1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.

👉1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.

👉1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.

👉1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.

👉1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

👉1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.

👉1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

👉1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.

👉1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.

👉1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.

👉1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.

👉1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.

👉1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.

👉1981 – இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

👉1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.

👉1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.

 👉 2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1799 – அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)

👉1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)

👉1901 – சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970)

👉1930 – சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005)

👉1948 – சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)

👉1973 - ஸ்டன்ட் சிவா, சண்டை இயக்குனர் மற்றும் பயிற்சியாளர்.

👉1986 – பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை.

👉1986 - கௌரி முன்ஜால், இந்திய திரைப்பட நடிகை.

👉1999 - சனா அல்தாப், இந்திய மற்றும் மலையாள திரைப்பட நடிகை.


இன்றைய தின இறப்புகள்


👉1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)

👉1968 – ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925)

👉1996 – ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)

👉2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939)

👉2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)

👉2009 – ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்


இன்றைய தின சிறப்புகள்.


👉தமிழீழம் – மாணவர் எழுச்சி நாள்

👉சுவீடன் – தேசிய நாள்

👉தென் கொரியா – நினைவு நாள்

குயின்ஸ்லாந்து நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.