இலங்கையில் இறுதியாக பதிவானதாக அறிவிக்கப்பட்ட 101 கொரோனா மரணங்கள் குறித்த முழு விபரம் - பட்டியல் இணைப்பு.

 இலங்கையில் இறுதியாக பதிவானதாக அறிவிக்கப்பட்ட 101 கொரோனா மரணங்கள் குறித்த முழு விபரம் - பட்டியல் இணைப்பு.


2021 பெப்ரவரி 06 தொடக்கம் ஜூன் 09 ஆம் திகதி வரையில் 19 நாட்களில் இடம்பெற்றுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் நாட்டில் 101 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


அதன்படி, நேற்று (ஜூன் 10) இறுதியாக பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்றாளர்களின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை - 2011 ஆகும்.


பெப்ரவரி 06 - 01 மரணம்

ஏப்ரல் 01 - 01 மரணம்

மே 15 - 01 மரணம்

மே 16 - 01 மரணம்

மே 20 - 01 மரணம்

மே 21 - 01 மரணம்

மே 22 - 01 மரணம்

மே 26 - 01 மரணம்

மே 27 - 03 மரணங்கள்

மே 29 - 02 மரணங்கள்

ஜூன் 01 - 02 மரணங்கள்

ஜூன் 02 - 02 மரணங்கள்

ஜூன் 03 - 07 மரணங்கள்

ஜூன் 04 - 04 மரணங்கள்

ஜூன் 05 - 04 மரணங்கள்

ஜூன் 06 - 27 மரணங்கள்

ஜூன் 07 - 27 மரணங்கள்

ஜூன் 08 - 13 மரணங்கள்

ஜூன் 09 - 02 மரணங்கள்



உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் ∙ பால்


பெண்கள் - 48

ஆண்கள் - 53


∙ வதிவிடப் பிரதேசம்


வாழைச்சேனை, வேபோட, பசறை, வெலம்பட, புப்புரஸ்ஸ, நாவலப்பிட்டி, தொலஸ்பாகை, நுவரெலியா, ஹற்றன், றாகம, பொலன்னறுவை, பண்டாரகம, நேபொட, மில்லனிய, உனவட்டுன, அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினுவாங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிசை, ஹோமாகம, பிலிந்தலை, தெஹிவளை, மஹரகம, கொழும்பு 15, கெஸ்பேவ, கந்தபொலை-நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகலை, நாத்தாண்டிய, அக்கறைப்பற்று, மொரட்டுவை, மடவல, ஹப்பகஸ்தென்ன, நாகொட-களுத்துறை, மத்துகம, பேருவளை, கித்தலவ-களுத்துறை, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அங்கொட்டாவல, ஆண்டியம்பலம், மட்டக்களப்பு, உடபுஸ்ஸல்லாவ, ரத்தொலுகம, சீதுவ, அரநாயக்க, புலத்சிங்கள, அங்குருவாத்தோட்ட, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, பொம்புவல, கண்டி, வெரல்லேகம, வேயங்கொடை, வெலிகம, பூஸ்ஸ, ரத்கம, மாரவில, படல்கம, அம்பகஸ்துவ, எகொட உயன, அங்குலான, தும்மலசூரிய, மற்றும் திகன்னேவ.


∙ அவர்களின் வயதெல்லை


வயது 20 இற்கு கீழ் - 00

வயது 20 - 29 - 01

வயது 30 - 39 - 03

வயது 40 - 49 - 02

வயது 50 - 59 - 14

வயது 60 - 69 - 30

வயது 70 - 79 - 25

வயது 80 - 89 - 21

வயது 90 - 99 - 05

வயது 99 இற்கு மேல் - 00



∙ உயிரிழந்த இடங்கள்


வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 30

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 14

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 57


∙ உயிரிழந்தமைக்கான காரணங்கள்


கொவிட் தொற்றுடன் கொவிட் நிமோனியா, சுவாசத்தொகுதி செயலிழப்பு, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய், மோசமான சுவாசக்கோளாறு, இதய நோய் நிலைமை, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நாட்பட்ட கல்லீரல் நோய், குருதி நஞ்சானமையினால் அதிர்ச்சி, மூச்சுக்குழாய் நிமோனியா, தீவிர சிறுநீரக பாதிப்பு, உயர் குருதியழுத்த இதயநோய், பெருமூளைச்சிதைவு, நுரையீரல் அழற்சி, குருதி நஞ்சானமை, என்செபலைடிஸ், மார்பக புற்றுநோய், தீவிர கொவிட் நிமோனியா, செப்டிசீமியா, தீவிர சிறுநீரக செயலிழப்பு, பெருந்தமனி தடிப்பு இதய நோய், கொவிட் என்செபலோபதி, வலிப்பு நோய் மற்றும் தைரொய்ட் போன்ற நிலைமைகள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.