சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,500 கிலோ நெய் அடங்கிய கொள்கலன் கைப்பற்றப்பட்டது.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,500 கிலோ நெய் அடங்கிய கொள்கலன் கைப்பற்றப்பட்டது.விளக்கேற்றும் எண்ணெய் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட நெய் அடங்கிய 100 கேன்களை கொண்ட கொள்கலன் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்த கேன்களில் 1500 கிலோ நெய் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 2.8 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த கொள்கலன் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

 

அதில் 1,600 கேன்கள் ஓட்ஸ் மற்றும் விளக்கேற்றும் எண்ணெய் இருப்பதாக இறக்கமதியாளர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.


இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 1.3 மில்லியன் ரூபா  வரிவருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


#WHATSAPP_GROUPS

👇👇👇👇

https://chat.whatsapp.com/BV6Jb9v2Uwg6r7csYAee9w


#FACEBOOK_PAGE

👇👇👇

Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/itmchan


WEBSITE

👇👇👇

http://www.InternationalTamilMedia.com


#விளம்பரங்களுக்கு

👇👇👇

Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.