பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள்- சம்பவம்

 


பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. 


பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள்

 தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.

மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த, பைத்தியம் பிடித்த நாய், மூன்று பெண்களே கடித்துள்ளது.

நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.

அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிப்பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.

அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

எனினும், அங்கு கடமை​யிலிருந்த வைத்தியசாலை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.

அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்தே கொன்றுள்ளனர்.

பைத்தியம் பிடித்த அந்த நாள், வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.