உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கப்பட்ட பகுதிகள்.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கப்பட்ட பகுதிகள்.நாட்டில் உடன் அமுலுக்குவரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி பதுளையின் வெலிமடை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஹூலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


களுத்துறை மாவட்டத்தின் மத்துகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட யட்டதொல கிராம சேவகர் பிரிவின் அபேதன்ன வத்தை பிரதான பகுதியும், க்ளே பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டன.


மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.


யாழ்ப்பாணம் - கரவெட்டி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட கரனவாய் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது.


இரத்தினபுரியின் பொத்தகந்த கிராம சேவகர் பிரிவின் நோரகல தோட்டம் மேல் பிரிவு, பனாவென்ன கிராம சேவகர் பிரிவின் பெல்மதுல தோட்டத்தின் 1ஆம் 5ஆம் பிரிவுகள் மற்றும் கபுஹெதொட்ட கிராம சேவகர் பிரிவின் பெல்மதுல தோட்டத்தின் 5ஆம் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.


மேலும் ,கொழும்பு கிரேன்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.