வரலாற்றில் இன்று – 25.06.2021 ஜூன் 25 கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 25.06.2021

ஜூன் 25 கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.



இன்றைய தின நிகழ்வுகள்.


👉1678 – எலேனா பிஸ்கோபியா தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

👉1940 – பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.

👉1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியாப் போர் ஆரம்பமானது.

👉1967 – உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.

👉1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

👉1975 – போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.

👉1983 – லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.

👉1991 – குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.

👉1996 – சவுதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

👉1997 – புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.

👉1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.

👉2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1900 – மவுண்ட்பேட்டன் பிரபு, பர்மாவின் முதலாம் ஏர்ள் மவுண்ட்பேட்டன், இந்தியாவின் கடைசி வைசிராய் (இ. 1979)

👉1931 – வி. பி. சிங், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2008)

👉1925 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்

👉1962 – நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (இ. 2006)

👉1966 – டிகெம்பே முடம்போ, காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர்

👉1974 – கரிஸ்மா கபூர், இந்திய நடிகை

👉1981 – பூஜா உமாசங்கர், தமிழ் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉1894 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சுக் குடியரசின் அரசுத் தலைவர் (பி. 1837)

👉1971 – ஜோன் ஓர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1880);

👉1984 – மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (பி. 1926)

👉2009 – மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)


இன்றைய தின சிறப்புகள்.


👉மொசாம்பிக் – விடுதலை நாள் (1975)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.