ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை - எந்த நாட்டை சேர்ந்தவர் என்று தெரியுமா?ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை - எந்த நாட்டை சேர்ந்தவர் என்று தெரியுமா?


மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.


இதன்படி ,அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஆறாண்டுகளுக்கு முன்பு, போட்டியாளர்களின் தேர்வு முறை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதிகளில் மேற்கொண்ட மாற்றத்தின்படி, இவர் தகுதிவாய்ந்த நபராக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த 2013 ஆம் நடந்த பளு தூக்குதல் போட்டிகளில் இவர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


“நியூசிலாந்து மக்கள் எனக்கு காட்டிய கருணை மற்றும் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்று ஹப்பார்ட் கூறியதாக நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்களின் 87 கிலோ பிரிவில் லாரல் ஹப்பார்ட் போட்டியிட உள்ளார்.


டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் குறைவாக இருந்தால், திருநங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் ஒரு பெண்ணாக போட்டியிட அனுமதிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) தனது விதிகளை மாற்றியமைத்தது.


மேலும் ,அதன்படியே தற்போது 43 வயதான லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.