I am Coming..... பசில் ராஜபக்ஷ to Parliament??

 I am Coming..... பசில் ராஜபக்ஷ to Parliament??


அமெரிக்காவிலிருந்து நேற்று(24) நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.

எனினும் இதுதொடர்பாக ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷ ஜூலை மாதம் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

எனினும் சில உறுப்பினர் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை குறித்த விடயம் தீர்க்கப்பட்டதன் பின்னர் அவர் பதவி ஏற்க வேண்டும் என அறிவுறுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான கலந்துரையாடல்கள் ஆளுந்தரப்பில் இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரசியல் மட்டத் தகவல்களின் படி, பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கும் பொருட்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொட அல்லது பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகிய இருவரில் ஒருவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பார் எனத் கட்சி தகவல்கள் கூறுகின்றன.

அதன்பின்னர் அவர் நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்வார் என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.