2வது டி20 போட்டி - இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 2வது டி20 போட்டி - இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.

இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

 இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. குசால் மெண்டிஸ் 39 ரன்னும், குசால் பெராரா 21 ரன்னும் எடுத்தனர்.

 இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 

36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. சாம் பில்லிங்சும், லிவிங்ஸ்டோனும் தாக்குப்பிடித்து நின்றனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடனும், சாம் கரன் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கு அளிக்கப்பட்டது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.