Happy Birthday கிறிஸ் எவன்ஸ்

Happy Birthday கிறிஸ் எவன்ஸ் 


Born on 13 Jun 1981 (Age 40) கிறிஸ் எவன்ஸ் அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு பயோ டிவேர்சிட்டி என்ற குறும் படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் 2000-ம் ஆண்டில் தி நியூ கமெர்ஸ் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் நாட் அனதர் டீன் மூவி என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் பல திரைப்படத்தில் நடித்தும் சரியாக கைகோர்க்கவில்லை, பின்னர் 2005-ம் ஆண்டு ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படத்தில் அக்னி மனிதனாக நடித்து குழந்தைகளின் பிரயத்தையும், பாராட்டுகளையும் பல வென்றார். இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு மார்வெல் செஷனின் கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் நடித்து உலகளவில் பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ஃபெண்டாஸ்டிக் ஃபோர், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2, கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், தி அவேஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர் உள்ளிட்ட பல திரைப்படங்களால் இவருக்கு பாராட்டுகள் குவிந்தன. கிறிஸ் எவன்ஸ் பாஸ்டன் நகரில் பிறந்து ஸட்பெரீ நகரில் வளர்ந்தார். அவரது தாயார், லிசா மேரி, கான்கார்ட் யூத் தியேட்டரில் ஒரு கலை இயக்குனர். மற்றும் அவரது தந்தை, ஜி ராபர்ட் "பாப்" எவன்ஸ் ஒரு பல் மருத்துவர். இவருக்கு 2 சகோதரிகள் உண்டு. இவரது தாயார் அரை இத்தாலியர் மற்றும் அரை ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். எவன்ஸ் லிங்கன் ஸட்பெரீ ரீஜனல் உயர்நிலை பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் 2004ம் ஆண்டு இருந்து 2006ம் ஆண்டு வரை நடிகை 'ஜெஸ்ஸிகா பைல்' டேட்டிங் இருந்துள்ளார். மற்றும் நடிகை 'மின்கா கெல்லி'யுடனும் டேட்டிங் செய்துள்ளார். இவர் கேப்டன் அமெரிக்கா நடித்ததுக்கு பல பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஃபெண்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தி அவேஞ்சர்ஸ் திரைப்படங்களில் நடித்தற்காக விருதுகளை வென்றார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.