கட்டணமும் அதிகரிக்கப்படுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பஸ்



 கட்டணமும் அதிகரிக்கப்படுமா?

 𝑰𝑻𝑴▪️எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

𝑰𝑻𝑴▪️நேற்றைய தினம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

 𝑰𝑻𝑴▪️இதன்போது கருத்து தெரிவித்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரின்ஜித், தற்போதையை டீசல் விலை உயர்வு காரணமாக 15 சதவீத பஸ் கட்டண உயர்வுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார். 

𝑰𝑻𝑴▪️மேலும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் கட்டாயமாக நூற்றுக்கு 25 சதவீத கட்டண அதிகரிப்பிற்கு செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டார். 𝑰𝑻𝑴▪️இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரை 94.25 ரூபாவுக்கு வழங்க அரசாங்கத்திற்கு இயலுமை உள்ளதாக கனிய வள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.