Happy birthday ஈஸ்வரி ராவ்

Happy birthday ஈஸ்வரி ராவ்



 13 Jun 1973 (Age 48) ஈஸ்வரி ராவ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், இயக்குனர் எல்.ராஜா-வை திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார். 1990-ம் ஆண்டு "இந்திந்த தீபாவளி" என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்பு அதே ஆண்டு "கவிதை பாடும் அலைகள்" திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்த இவர், சன் தொலைக்காட்சியின் "கோகிலா இங்கே போகிறாள்", "உதயம்", "கஸ்தூரி" என நாடகங்களின் மூலம் பிரபலமானவர். பின்பு ஜெயா, ஜெமினி, விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த "சரவணன்" திரைப்படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவேளைக்கு பின் 2018-ம் ஆண்டு ரஜினி நடித்த "காலா" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகை தந்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.