சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை.


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்காவிட்டால் சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமென பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும். எனவே உள்நாட்டிலும் ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும்,400 கிராம் பால்மா பக்கட்டின் விலையை 140 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அச்சங்கம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 உலக சந்தையில் பால்மாக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சில நிறுவனங்கள் புதிதாகப் பால்மாக்களை இறக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளதோடு, சில நிறுவனங்கள் பால்மா இறக்குமதியை 30 சதவீதத்தாலும் குறைத்துள்ளது.

 எனவே, பால்மா விலைகளை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம், விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமெனவும் பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.