பசித்தோரை பசியாற்றும் பரோட்டா கடை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 பசித்தோரை பசியாற்றும் பரோட்டா கடை. 


பேருவலையில் சில பகுதிகளில் மக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு நன்மை கருதி பராட்டாக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு பரோட்டாவின் விலை சுவையான பருப்புக் கறியுடன் விலை 7/= மட்டுமே.

 இதன்படி ,மக்களின் கஷ்டமான நிலையை உணர்ந்து சேவையையும் நண்மையையும் கருதி இப்பகுதிகளில் உள்ள இளைஞர்களால் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 தேவையானவர்களுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். அதன்படி ,இது ஏனைய பகுதி மக்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். 

மக்கள் உணவுக்காக கஷ்டப்படும் ஏனைய பகுதிகளிலும் தற்காலிகமாக நண்மை கருதி இவ்வாறான சாப்பாட்டுக் கடைகளை ஆரம்பித்தால் இது மக்களுக்குச் செய்யும் பேருதவியாகும். மேலும் ,இளைஞர்கள் தற்போது வீட்டில் ஓய்வாக இருக்கும் காலங்களில் ஒன்று சேர்ந்து இவ்வாறான ஒரு சேவையை மேற்கொண்டால் மக்களின் கஷ்டங்களுக்கு கை கொடுக்கும். People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.