இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 


Born on 22 Jun 1974 (Age 46) விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

 ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

 விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள். 

👉பிறப்பு / கல்வி விஜய், சென்னையில் ஒரு படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும், ஷோபா சந்திரசேகருக்கும் (பின்னணி பாடகர்) மகனாக பிறந்தார் .வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவருக்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்தார். விஜய் சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார். 

👉திருமணம் விஜய், இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். 

👉பிரபலம் விஜய், குழந்தை பருவம் முதலே ஒரு சில படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்பு தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த நடிகராக உள்ளார். இவர் விளம்பர‌ப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.

ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார்.

 இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அவரது உறவினர் விக்ராந்த் ஒரு நடிகர். அவரது மாமா எஸ்என் சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர்ஆவார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.