இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவின்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவின். 


22 Jun 1990 (Age 30) கவின் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சியில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். 

👉அறிமுகம் / தொடக்கம் தனது கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பில் மேல் ஆர்வம் கொண்டுள்ள இவர், ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். இவர் முதலில் நன்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் நடிப்பினை முழுமையாக கற்றுக்கொள்ள ஒரு நாடக பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார். 

👉பிரபலம் விஜய் தொலைக்காட்சியில் நடிகராக தன் வாழ்க்கையை கனா காணும் காலங்கள் தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் முருகன் என்ற கதாபாத்திரமும், சரவணன் மீனாட்சி பகுதி 2-ல் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். நாடக தொடர்களில் நடித்து பிரபலமான இவர், இன்று நேற்று நாளை திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்து திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். 

பின்னர் கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 2017-ஆம் ஆண்டு சத்ரியன் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து திரைப்படங்களிலும் நடிப்பினை தொடர்ந்த இவர், 2019-ஆம் ஆண்டு நட்புன என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 

👉பிக் பாஸ் இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.