நாப்கின்_பயன்படுத்தும்_போது_தவறாமல்_கடைபிடிக்க_வேண்டிய_விஷயங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 #நாப்கின்_பயன்படுத்தும்_போது_தவறாமல்_கடைபிடிக்க_வேண்டிய_விஷயங்கள். 

மாதவிடாய் பற்றி பொதுஇடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். டி.வியில் நாப்கின் விளம்பரம் வந்தால்கூட வேறு பக்கம் முகம் திருப்பும் ஆண்களும் இருக்கின்றனர். 

இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர் ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை. 

மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பெண்கள் மகப்பேறு மருத்துவர் மைதிலி தரும் தகவல்கள். பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. 

இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப் பட்டிருக்கும்) வாங்குவது நல்லது. இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. 

நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும். 

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப் பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். 

இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது. நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். 

பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். 

பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப் படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.