இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா? 


தற்போதைய நிலவரம் இதுவா? இலங்கையின் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலெிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 இதன்படி , அரசாங்கத்தின் கையிருப்பு குறித்து தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் கையிருப்பு குறையும் பட்சடத்தில் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பும் கேள்விக்குள்ளாகும். 

இது சிவப்பு எச்சரிக்கையாக கருதப்படும். இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு 3 மாதங்களுக்கும் குறைவாகவாக இருக்கும் நிலையும் உள்ளது. இதுகுறித்து இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர், ''நீங்கள் குறிப்பிட்டதில் உண்மை இருக்கிறது. அதன்படி ,இதுகுறித்து நாம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த மாதம் கடன் தவணையொன்று செலுத்த வேண்டியிருக்கிறது. 

அடுத்த மாதம் ஒரு பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருக்கிறது. தங்கத்துடன் எமது கையிருப்பு 4.5 பில்லியன் டொலர் கையிருப்பில் இருக்கிறது. அப்படி பிரச்சினையொன்று இல்லாமல் இல்லை. இதைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

 பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால் நீங்கள் கூறுவது போல் சிவப்பு எச்சரிக்கை இல்லை. எனினும், இந்த எச்சரிக்கையை நாம் உதாசீனப்படுத்தவில்லை. மூன்று மாதங்களுக்கான கையிருப்பு இருக்கிறது. எனினும் இதனை இவ்வாறே கையாள்வது சவாலானது. 

பிரதான வருமான வழிகள் சிவப்பு எச்சரிக்கை என்ற அபாய நிலையில் நாம் இல்லை. இதனை எம்மால் கையாள முடியும். இதுகுறித்து அமைச்சரவையில் கவனம் செலுத்தியுள்ளோம்.'' 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.