கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசியே.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசியே. 


பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எம்மிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் தடுப்பூசியே. எனவே, கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தயங்கக்கூடாது. 

30 வயதுக்கு மேற்பட்டவார்கள் அனைவரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வேண்டும்.” அவ்வாறு,கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 இவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 இலட்சம் தடுப்பூசிகளை இதுவரை ஏற்றியுள்ளோம். 

அடுத்த இரு மாதங்களில் பெரும்பான்மையான மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசிகளை ஏற்ற முடியும். மேலும் ,சில இடங்களில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் பின்னடிக்கின்றார்கள். 

மக்கள் இவ்வாறு அச்சமடைவது ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தத் தடுப்பூசியில்தான் கொரோனாவை எதிர்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.