தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 20

  தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை. 


சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா என்றும் சுட்டிக்காட்டினார். 

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.