வரலாற்றில் இன்று – 16.07.2021

 வரலாற்றில் இன்று – 16.07.2021


ஜுலை 16 (July 16) கிரிகோரியன் ஆண்டின் 197 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 198 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்


👉622 – முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.

👉1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.

👉1769 – சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.

👉1930 – எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்.

👉1942 – பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.

👉1945 – மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

👉1948 – இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

👉1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

👉1955 – டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

👉1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

👉1969 – அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.

👉1979 – ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

👉1989 – புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉1990 – பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.

👉1994 – ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

👉1995 – காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

👉1994 – “ஷூமேக்கர்-லெவி 9” என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

👉1999 – ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

👉2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

👉2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

👉2006 – தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்


1194 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (இ. 1253)

1746 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1826)


👉1872 – ருவால் அமுன்சென், நோர்வேஜிய விமான ஓட்டி, நாடு-காண் பயணி (இ. 1928)

👉1888 – பிரிட்சு ஜெர்னிகி, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1966)

👉1896 – திறிகுவே இலீ, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (இ. 1968)

👉1907 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1963)

👉1909 – அருணா ஆசஃப் அலி, இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (இ. 1996)

👉1936 – யாசுவோ ஃபுக்குடா, சப்பானின் 91வது பிரதமர்

👉1936 – வெங்கட்ராமன் சுப்ரமணியம், இந்திய-ஆத்திரேலியத் துடுப்பாளர்

👉1942 – மார்கரெட் கோர்ட், ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை

👉1947 – சிவகங்கை இராசேந்திரன், இந்தி எதிர்ப்புப் போராளி (இ. 1965)

👉1968 – தன்ராஜ் பிள்ளை, இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்

👉1968 – லாரி சாங்கர், அமெரிக்க மெய்யியலாளர், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்

👉1973 – ஷான் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

👉1984 – கத்ரீனா கைஃப், பிரித்தானிய-இந்திய நடிகை

👉1989 – கேரத் பேல், வெல்சிய கால்பந்தாட்டக் காரர்

👉1989 – கிம் வூ-பின், தென்கொரிய நடிகர்.

👉1990 – ஜேம்ஸ் மாஸ்லொவ், அமெரிக்க நடிகர்


இன்றைய தின இறப்புகள்.


👉1764 – உருசியாவின் ஆறாம் இவான், இரசியப் பேரரசர் (பி. 1740)

1890 – வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், பிரித்தானிய வழக்கறிஞர், கல்வியாளர் (பி. 1825)

👉1916 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (பி. 1845)

👉1989 – உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்

👉2009 – டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)

👉2012 – இசுடீபன் கோவே, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1932)

👉2013 – பருண் டே, இந்திய வரலாற்றாய்வாளர், கல்வியாளர் (பி. 1932)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉பெரும் இன அழிப்பு நினைவு நாள் (பிரான்சு)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.