உலகின் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

உலகின் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு 


அமெரிக்காவில் குடியிருந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் அபிமன்யு மிஸ்ரா, சதுரங்கப் போட்டியில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

இதன்படி ,அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் அபிமன்யு மிஸ்ரா, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 15 வயதுச் சிறுவன் லியோன் லூக் மெண்டோன்காவைத் தோற்கடித்தார். 

இதன்மூலம் உலகின் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். மேலும் ,2002ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்ஜீ கர்ஜாக்கின் பன்னிரண்டரை வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதே இதற்கு முன் சாதனையாக இருந்தது. 19 ஆண்டுக்காலமாக இருந்த சாதனையை அபிமன்யு மிஸ்ரா முறியடித்துள்ளார்... ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.