டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

இந்திய கொவிட் திரிபான டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், நாட்டில் பயணத்தடை தற்போது நீக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் மிக அவதானத்துடன், செயற்பட வேண்டும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. டெல்டா திரிபானது இந்தியாவில் அதிக மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

 சமூகத்தில் டெல்டா திரிபு பரவல் தொடர்பில் மக்கள் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதுடன், சுகாதார வழிமுறைகளைச் சரியாக பின்பற்ற வேண்டும். இன்றும் சிலர் முகக்கவசங்கள் இன்றி பயணிப்பதனை காணக்கூடியதாய் உள்ளது. 

இதுபோன்ற விடயங்களைத் தவிர்த்து சரியான முறையில் செயற்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் குறிப்பிடுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.