இராணுவத்தினரால் மிளகாய் உற்பத்தி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இராணுவத்தினரால் மிளகாய் உற்பத்தி.


யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 இதன்படி ,யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர். 

இதன்படி ,அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சுமார் 32 வருட காலங்களுக்கு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்கள், உறவினர் வீடுகள், வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். 

தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி கடந்த 11 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். 

அந்நிலையில் பொதுமக்களின் காணிகளை, தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவத்தினர் கையகப்படுத்தி அதனை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்துள்ளனர். குறித்த காணியில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகள், கால்நடை பண்ணைகள் என்பவற்றை அமைத்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.